செய்திகள்

நகரி,

‘உலகம் சுழல்வதற்கு உழவுதான் அடிப்படை’ என்கிறார் திருவள்ளுவர். இந்த அகில உலகமும் விவசாயி இல்லாவிட்டால் இயங்காது. ஆனால் இன்று ஊருக்கு சோறிடும் விவசாயியின் நிலைமை எப்படி இருக்கிறது?.

பயிரிட்டு உரமிட்டு வளர்த்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், இயற்கையின் சீற்றத்தால் பயிர்கள் நாசமாகியும் வேளாண் தொழில் நஷ்டத்தை அடைகிறது. இதனால் முதலுக்கே மோசமாகி கடனாளியாக சிரமப்பட்டு வருகிறார். ஆந்திர மாநிலத்தில் விவசாயி ஒருவர், தனது நிலத்தை உழுவதற்கு மாடும், டிராக்டரும் இல்லாததால் தனது மகனையும், மகளையும் ஏரில் பூட்டி உழுதுள்ளார். கடப்பா மாவட்டம் பெண்டிளிமர்ரி கிராமத்தை சேர்ந்த பண்டி சேகர்ரெட்டி என்பவர்தான் அந்த விவசாயி. இதுதொடர்பான வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/YM4uGqd
via IFTTT

Post a Comment

0 Comments