செய்திகள்

ராமேசுவரம்,

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் இடையார் காட்டு பகுதியை சேர்ந்தவர் டேவிட் பாலேந்திரன். இவர் 2007-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின்போது படகு மூலமாக தமிழகத்திற்கு தப்பிவந்து சென்னையில் சட்டவிரோதமாக குடியேறினார். 2014-ம் ஆண்டு டேவிட் பாலேந்திரன் போலி பாஸ்போர்ட் தயாரித்து கடல் வழியாக ஆஸ்திரேலியா தப்ப முயன்றபோது கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே டேவிட் பாலேந்திரன் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார்.

இந்நிலையில் டேவிட் பாலேந்திரன் இதய நோய்க்கு சிகிச்சை பெறவும், முல்லைத்தீவில் வயது முதிர்வால் மருத்துவ சிகிச்சையில் உள்ள தன் தாயை சந்திப்பதற்காகவும் இலங்கை செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் செல்ல முடியாததால் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக நாட்டுப்படகில் தப்பி இலங்கை சென்றார். இலங்கை மன்னார் கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு கடற்படையினர் டேவிட் பாலேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல அவரை நாட்டுப்படகில் அழைத்துச் சென்றவர் யார்? என்பது குறித்து மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/Vnuzk87
via IFTTT

Post a Comment

0 Comments