ஸ்ரீநகர்,
காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "பூஞ்ச் பகுதியில் போர்நிறுத்த மீறல்கள் குறித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் எந்த போர்நிறுத்த விதிமீறலும் நடக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/k35Fl8T
via IFTTT
0 Comments