செய்திகள்

திருப்பூர்,

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகள் கீர்த்தி மீனா (வயது 21). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிவக்குமார் - கீர்த்தி மீனா தம்பதியினர் திருப்பூர், இடுவம்பாளையம், சிவசக்தி நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது குறித்து கீர்த்தி மீனா, சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவக்குமார் அந்த பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்திமீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

இதனைக்கண்டு மனமுடைந்த கீர்த்தி மீனா, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கீர்த்திமீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கீர்த்தி மீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/v394Jul
via IFTTT

Post a Comment

0 Comments