செய்திகள்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுன் பகுதியை சேர்ந்தவர் சந்த்சாப். இவரது மனைவி டெல்லியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சந்த்சாப் சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மது விருந்து கொடுத்தார். அப்போது மது போதையில் சந்த்சாப்பிற்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தகராறு முற்றவே அவரது நண்பர்கள், சந்த்சாப்பை நிர்வாணமாக்கி கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில், கலபுரகி டவுன் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான சந்த்சாப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி டெல்லியில் உள்ள அவரது மனைவிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கலபுரகி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/IzrG5hF
via IFTTT

Post a Comment

0 Comments