செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் ‘சக்தி கொலு' விழா நேற்று தொடங்கியது. லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலுபாட்டு நடந்தது. தொடர்ந்து, பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு நாமசங்கீர்த்தனம், இசைகச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

நவராத்திரி 10 நாளில் தினமும் காலை 11 மணி முதல் 11.30 மணிவரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை வீற்றிருக்கும் அம்மனுக்கு கொலு மண்டபத்தில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்படுகிறது. நவராத்திரி சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு, 26-ந்தேதி காலை 7.30 மணியிலிருந்து பகல் 12 மணிவரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது. தினமும் மாலை, 5 மணி முதல் இரவு 7 மணிவரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலுபாட்டு நடத்தப்படுகிறது.

வருகிற 28-ந்தேதி மாலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை சிறப்பு திருமுறை பாராயணம், 29-ந்தேதி மாலை 4.15 மணிக்கு மகளிரின் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு நாமசங்கீர்த்தனம், இசைகச்சேரி, ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கிறது.

நவராத்திரியின் நிறைவு பகுதியாக அக்டோபர் 2-ந்தேதி, ‘வித்யாரம்பம்' எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை தொடங்கும் நிகழ்வு நடக்க உள்ளது. கொலு கண்காட்சி நேரத்தில் ஆன்மிக வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஆதிமூலம், துணை-கமிஷனர் ஹரிஹரன் உள்பட பலர் செய்திருந்தனர்.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/Q8NgDji
via IFTTT

Post a Comment

0 Comments