செய்திகள்

மும்பை,

மராட்டிய மாநிலம் சோலாபூர் மாவட்டம் சுஷில் நகரை சேர்ந்த இளைஞர் அசோக் (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், அசோக் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பிய அசோக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு ஸ்டோரி வைத்துள்ளார். அதில் ’முடிவே ஆரம்பம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்து விரைந்து சென்ற போலீசார், அசோக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துவிட்டு அசோக் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/o0HtRv9
via IFTTT

Post a Comment

0 Comments