செய்திகள்

அகர்தலா,

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள ஹோலாஷெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் நேற்றுமுன்தினம் மாலை இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தார். அருகில் வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணையில் இறந்தவர்கள் உதய்பூரைச் சேர்ந்த ஜன்னத் அக்தர் (வயது 26), ஷால்கரா பகுதியைச் சேர்ந்த ஷோஹேல் மியா என்பதும், இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்தது. இந்த ஜோடி தீவிரமாக காதலித்து வந்த நிலையில், அவர்களுடைய பெற்றோர் இருவருக்கும் வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஜன்னத் அக்தர் காரில் காதலியை அழைத்து வந்து சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அங்கு கிடந்த துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றினர்.

 



from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/OtNRzKH
via IFTTT

Post a Comment

0 Comments