செய்திகள்

திருநெல்வேலி, மேலப்பாளையம், குறிச்சி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் செல்வகண்ணன் (வயது 21) என்பவர் திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து அந்த வாலிபர், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (மேலப்பாளையம் சரகம்) கண்ணதாசன், மேலப்பாளையம் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கத்துரை ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 



from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/iSgbUr4
via IFTTT

Post a Comment

0 Comments