செய்திகள்

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இம்மாத தொடக்க முதல் தொடர் சரிவை சந்தித்து வந்தது. டிரம்ப் வரிவிதிப்பு அச்சுறுத்தல், சர்வதேச அரசியல் சூழ்நிலை, போர் பதற்றம் உள்பட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், தொடர் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை இன்று (22.01.2026 - வியாழக்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 132 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 289 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 399 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 200 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 186 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 149 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 397 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 307 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

170 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 325 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 556 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 826 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/l84Uapc
via IFTTT

Post a Comment

0 Comments