மானிடப் பிறப்பு
அரிதென்றார்
ஒளவை.
அரிதென்றார்
ஒளவை.
பிறப்பின் அருமை
புரியாமலே
புரள்கின்றார்
புழுதியிலே.
வளங்களை எல்லாம்
வாரிக் குவிக்க
வஞ்சனை செய்கின்றார்
ஞாலத்திலே.
ஆன்றோர் அருளிய
அறத்தை
நுனிப்புல் மேய்ந்த
மந்தைகளாய்
மதியிலே.
நிரந்தரம் என்றே
வாழ்கின்றார்.
வரம் தரும்
பரம்பொருளைப்
புறம் தள்ளியே!
நூறாண்டு வாழ்வோம் என்று
பேராசை கொண்டு
உடலைப் பேணாமல்
உடைகிறது
நீர்க்குமிழி வாழ்க்கையே.
ஆணவப்பேய் பிடித்தும்
மதம் பிடித்தும்
ஆடாத ஆட்டம் ஆடி
அடங்கி விடுகிறது
அற்ப வாழ்க்கையே.
வாழும்போதே
வாழும் கலையை
வையகத்துக்குச்
சொல்லி வைப்போம்.
ஒரு முறைதான்
வாழ்க்கை என்று
உணர வைப்போம்.
பயண நோக்கம் அறிந்தே
பயணிப்போம்
சக பயணிகளோடு
சந்தோசமாகவே!
சந்தோசமாகவே!
0 Comments