என்னை செதுக்கிய புத்தகம்.


என்னை செதுக்கிய புத்தகம்.

சிலம்பெனும் காப்பியமே
சீர்படுத்தியது எம்மையே!

கடவுள் வாழ்த்தே
காரியமாற்றும் இயற்கை!

மடைமாற்றிய மகத்தான
மாண்புயர் நூலே!

நெஞ்சை அள்ளும்
தீஞ்சுவை  நிறைந்ததுவே!

 உள்ளத்தை வசப்படுத்தும்
கதையம்சம் அதுவே!

அரசியல் அறங்கள்
செம்மையுடன் அமைந்ததே!

தரமாகக் கூறும்
அனைத்து மக்களையுமே!

வரலாற்றுச் செய்திகள்
நிறைந்து  நிற்கின்றதே!

தமிழரின் மாண்புகள்
மகிழ்கிறது சிலம்பிலே!

தமிழ்ச் சொற்கள்
தவழும் தடாகமே!

திருமண நிகழ்வுகளைக்
கண்முன் நிறுத்தும்!

தருணங்களாகத் தண்டமிழின்
தேன் துளிகள்!

முரசு இயம்பின
முருடுகள் அதிர்ந்தன!

மலர்களின் வகைகளை
வரிசைப் படுத்துகிறதே!

வாசனை திரவியங்களை
அள்ளித் தெளிக்கிறதே!

மாலையின் வருகையை
மகிழ்வோடு வரவேற்கிறதே!

திங்களின் தோன்றலை
மங்காது வரவேற்கிறதே!

காவிரியைப் பாடுது
கானல் வரியே!

இடர் தரும் இடங்களை
இயம்புகின்றதே!

எண்ணிலடங்கா வாழ்வியலை
வழி காட்டுகிறதே!

தமிழ் அன்னைக்கு
அணிகலன் சிலம்பே!

வாசித்து மகிழ்வோம்
தமிழின் சுவையை!

தமிழரின் வாழ்வியல்
அறங்களைக் கூறும்
நூல்களைக் கற்றுக்
கடைபிடிப்போமே!

Post a Comment

0 Comments