கிராமத்துப் பெட்டிக்கடை.

 

          கிராமத்தின்
வர்த்தக மையம்

ஒரு குடும்பத்தை 
வாழ வைக்கும் 
தொழிற்சாலை.

சின்னஞ்சிறு பிள்ளைகளின் 
இன்பச் சோலை.

கல்லாப் பெரியவர்களின் 
பாடசாலை.

பொல்லாப்பு பேசி 
வம்பு இழுக்கும் 
யுத்தபூமி.

சுட்ட ரொட்டி 
தொங்கும் 
தூக்குமேடை.

வழியறியா புதியவருக்கு 
கைகாட்டி.

வழியறிந்து வருபவருக்கு 
முகவரிப் பெட்டி.

உள்ளூர் வாசிகளின் 
அரட்டை அரங்கம்.

நாட்டு நடப்பை 
நல்கிடும்  நூலகம்.

இளைஞர்களுக்கு 
இன்பப் புகைக் கோட்டை.

கிராமத்து மக்களுக்கு  
மாத்திரை வழங்கும்
மருத்துவமனை.

கண்ணாடிக் குடுவைகளில் 
வண்ண இனிப்புகள்.

வண்ண இனிப்புகளால் 
வானவில் தோரணங்கள்.

பெட்டிக்கடையின் வாசம் 
பிள்ளைகளுக்கே வீசும்.

Post a Comment

0 Comments