உயிர்த் தொழில் செய்வோம்.
உயிருக்கு ஆகாரம் உடல்.
உடலுக்கு ஆகாரம் உணவு.
உணவுக்கு ஆகாரம் உழவன்.
விளைநிலங்களில்
அமோக விளைச்சல்
விண் முட்டும் கட்டிடங்கள்.
படித்த பெருமையில்
கிடைத்த பட்டங்கள்
பசியைப் போக்கும்
வி(வசா)(ச)யத்தை
வீசி விட்டது வீதியில்.
எத்தனை தலைமுறைக்
கணனிகள் வந்தாலும்
இரைப்பைக்கு உணவு
இறைப்பவன்
விவசாயி எனும் இறைவனே.
எத்தனை நுட்பங்கள்
நுழைந்தாலும்
உணவுக்கான நுழைவுச்சீட்டு
உழவனின் கைகளில் மட்டுமே.
கோட்டணிந்து கோபுரத்தில்
இருப்பவருக்கும்
கோவணத்தோடு உழைப்பவரே
பசிப்பிணி நீக்கும் பகவான்.
உயிர்காக்கும் உணவுத் தொழிலை
ஊக்குவிக்க
விவசாயம் செய்பவருக்கே
அரசு வேலையென்று புதுச்சட்டம்
இயற்றிப் பாதுகாப்போமே.
0 Comments