வெற்றிக்கொடி நாட்டிட...




துணிந்து எழுந்திடு
உலகை வென்றிடு.

உலகை வெல்ல
எண்ணித் துணிக!

நலமெலாம் சூழ
நற்கல்வி கற்க!

கல்வியின் பயனை
கடமையில் காட்டுக!

கடமையின் பயணம்
வெற்றிச் சிகரம் நோக்கி.

வெற்றிச் சிகரத்தில்
வீற்றிருக்க

தொடர்முயற்சியைத்
தொடர்க.

சிகரங்களில் இருக்கும் போது
சிரம் தாழ்த்தி இரு.

வெற்றிக் கனிகளோடு
வரவேற்பாள் 
வெற்றி தேவதை.

Post a Comment

0 Comments