கவித்தேரின் சாரதி - பாரதி.



கவித்தேரின்
சாரதியாம் பாரதி- தமிழ்ப்
புவித்தாயின்
வாரிசாம் பாரதி.

செந்தமிழின்
முத்துமணியாம் பாரதி-நல்
செங்கரும்பின்
இன்சுவையாம் பாரதி.

விடுதலைக்கு
உயிரூட்டியவராம் பாரதி- பெண்
விடுதலைக்கு
உரமிட்டவராம் பாரதி.

வறுமைக்கு
வாடாதவராம் பாரதி- மன
வலிமைக்குப்
பூச்சூடியவராம் பாரதி.

சாதிக்குச்
சவுக்கடி தந்தவராம் பாரதி- பறவை
சாதிக்கும் 
சமத்துவம் தந்தவராம் பாரதி.

குயிலுக்குப்
பண்ணிசைத்தவராம் பாரதி- காணி
நிலத்திற்குக்
கனவு கண்டவராம் பாரதி.

கண்ணம்மாவைக்
காதலித்தவராம் பாரதி- மணி
வண்ணனைத்
தலை வணங்கியவராம் பாரதி.

பாப்பாவுக்குப்
பாட்டுப் படித்தவராம் பாரதி- பாரதப்
பாஞ்சாலிக்குச்
சபதம் இயற்றியவராம் பாரதி.

இப்படி எழுதிக்
கொண்டே போகலாம் பாரதி- பாரில்
எல்லையே
இல்லாதக் கவிக்கடல் பாரதி. 

Post a Comment

0 Comments