இதயக் கடலில்
ஏற்படும்
எண்ண அலைகளே
வாழ்க்கைப் படகை
வண்ணமாய் செலுத்திடுமே!
ஏற்படும்
எண்ண அலைகளே
வாழ்க்கைப் படகை
வண்ணமாய் செலுத்திடுமே!
எண்ணப் பூங்காவில்
நறுமண மலர்கள்
மலர்ந்தால்
வண்ண மயமாய்
வாழ்க்கை
இனித்திடுமே!
காற்றடைத்த பையாம்
காயமெனும் உடலாம்
மாற்றம் ஆகுமே
நல்லெண்ணெக் குணத்தாலே!
காயமெனும் உடலாம்
மாற்றம் ஆகுமே
நல்லெண்ணெக் குணத்தாலே!
விதைக்குள் எண்ணங்கள்
நேர்மறையாயின்
விளையும் செயல்களும்
நேர்மறையாகுமே!
உதிர்க்கும் வார்த்தைகள்
கனிவாய் இருந்தால்
கதிர்களின் சுவையும்
இனிப்பாய் இருக்குமே!
எண்ணத்தை செப்பனிட்டு
ஏற்றம் பெற்றோர்
பட்டியல்
ஏறிக்கொண்டே உள்ளது!
சான்றோர்கள் எல்லாம்
எண்ணத்தால் மேம்பட்டவர்களே!
எண்ணத்தை சீராக்கி
ஏற்றமாய் வாழ்வோமாக!
0 Comments