தேர்ச்சி பெறும் தோல்விகள்.


வெற்றிகளின் அரசன்
தாமஸ் ஆல்வா எடிசனின்
சோதனைகளில்
தோல்விகளே
தேர்ச்சி  பெற்று
சரித்திரத்தின் பக்கங்களில்
சாதனையாக எழுத வைத்தது.

பார்வை இழந்தவர்
ஹெலன் கெல்லர்
தோல்விகளைப்
படிக்கட்டுகளாக்கி
மேதையாகத்
தேர்ச்சி பெற்றவர்.
வரலாற்றில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

குழந்தைகள்
தவழும் போது விழுவதும் 
நடக்கும்போது விழுவதும்
தோல்விகள் அல்ல..
ஓட்டத்தில் தேர்ச்சி பெறவே

மலையிலிருந்து
விழும் நீருக்கு
வீழ்ச்சி இல்லை.
அருவி என 
அழகான பெயர்.
வேகம் கூட்டவே
விழுந்து எழுகிறது.

வளர்சிதை மாற்றத்தில்
சிதைவது யாவும்
வளர்வதற்கே.

வெண்ணிலா
தேய்வதால் தோல்வியா?
வளர்வதால் வெற்றியா?
அதனதன் நிலையில் 
அனைத்தும் வெற்றியே!

தேர்வில் தோல்விகள்
வாழ்க்கைத் தேர்ச்சிக்கு
வழிகாட்டும்
அளவுகோல்
அவ்வளவே.

விதைகள் பிளப்பது 
செடியின் வெற்றியே
தோல்விகள் பிறப்பது 
வெற்றியின் விளைச்சலுக்கே!



Post a Comment

1 Comments

  1. மிக சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete