தாலாட்டு

 

குழந்தை கேட்கும் 
முதல் பாட்டுக் கச்சேரி

கவி இயற்றிப் பாடும் 
அம்மா கவிஞன்.

கற்பனை நிரம்பி வழியும் 
கவி மாலை

தூங்க வைக்கும்  
வைட்டமின் மாத்திரைகள்.

சொற்களால் கட்டப்படும் 
சுகமான ராகங்கள்.

தாயையும் சேயையும் 
இணைக்கும் மொழி.

சேயிற்காக பாடும் 
தாயின் வானொலி.

அத்தையையும் மாமனையும் 
வம்புக்கு இழுக்கும் 
சிலேடைப் பாட்டு.



Post a Comment

0 Comments