ஆரம்பக் கல்வி




தோளில் புத்தகப்பை! 
துவளும் உடற்பை!

துள்ளுமே உள்ளப்பை! 
கொள்ளுதே கல்விப்பை!

தேடி ஓடுதே நட்பை! 
கூடி மகிழுதே குழந்தை!

அழகாய்ப் பேசிடும் 
அரிவை!
ஆசானிடம் பெறுகிறது 
அறிவை!

வசமாக்கி கொள்கிறதே 
வாசிப்பை!
வாசமாய் வீசுகிறது 
தன்னிருப்பை!

ஆத்திச்சூடி  நிறைக்குமே 
அகத்தை!
கொன்றைவேந்தன் கொடுக்குமே 
குணத்தை!

பாரதி கொடுப்பாரே 
வீரத்தை!
தாசன் தருவாரே 
தமிழின் தீரத்தை!

அடிப்படைக் கல்வி 
அடிவாரம் ஆகிவிட்டால்

படிப்பதைப் பாதியில்
நிறுத்தாது பிள்ளைகள்.

பகுத்துணர்ந்து புரிந்து 
படித்து விட்டால் 

வருங்காலம் 
வளமாய் வாய்த்திடுமே!

ஆரம்;பக் கல்வியே 
அச்சாணியாம் அதைப் 

பசுமரத்தாணி போல் 
பதிந்து கொள்வோமே!

Post a Comment

0 Comments