அறிந்தார் யாருமிலர்!
சிதிலமடையா சிந்தனையால்
சிந்திப்பார் யார்உளர்?
மதில்மேல் பூனையாய்
மருகுகின்றார் மாந்தரே!
இதயமதில் ஏற்போம்
கற்றது கைமண்ணளவேயென்று!
சிறுபிள்ளை மூளையிலே
பலமொழிகள் ஏறிடுமாம்
அருமையாய் ஆயக்கலைகள்
அழகாய் கற்றிடுமாம்
வானளவு விடயங்களை
வாகாய்ப் பதித்திடுமாம்
தூணளவு சிக்கல்களை
தூள்தூளாய் ஆக்கிடுமாம்
பலகோடி கணக்குகளைப்
பக்குவமாய் தீர்த்திடுமாம்
நிலத்தடி அறிவியலை
நலத்தோடே நாடிடுமாம்
பழக்கங்களாலே உறவின்
பண்புகளைப் படித்திடுமாம்
இலக்கியங்களின் இனிமையை
இனிதே ஏற்றிடுமாம்
எத்தனைதான் இருந்தாலும்
கொள்ளும் அளவு
வெள்ளத்தனைய மலர் நீட்டமாய்
மாறுகிறதே!
கற்கும் சூழ்நிலையில்
கருகும் மலர்களதிகம்
ஏற்கும் மனநிலையில்
இல்லாத மாணவர்களதிகம்
பொழியும் மழைநீரை
பிடிக்கும் கைபோல்
வழியும் தேனை
உறிஞ்சும் தேனீபோல்
கொட்டிக்கிடக்கும்
கோடானு கோடி அற்புதங்களைக்
கற்றுக் கொள்வது எல்லாம்
கைமண்ணளவே.!
1 Comments
பெற்ற தெல்லாம்
ReplyDelete..............பெருமை எனவே
இற்றை வாழ்வில்
...............இனிய மனமும்
பற்றுக் கொள்ளும்
................பரமன் அடிமேல்
கற்ற தெல்லாம்
........... ....கடவுள் அருளால்.!
கட்டளைக் கலிவிருத்தம்
பெருவை கி.பார்த்தசாரதி