வாலிபப் பருவம்.
பாலகப் பருவம் தாண்டி
வாலிபப் பருவத் தேரேறி
ஐம்புலன் ஆளும் அரண்மனைக்குள்
இன்பமாய் நுழையும் இளவரசுகள்.
அரும்பு மீசையுடனே
அரும்பும் எண்ணங்கள்.
புவியீர்ப்பு விசையைத் தாண்டும்
இப்புலன் ஈர்ப்பு விசை.
பாலினக் கவர்ச்சிப் பார்வையில்
பளிச்சிடும்
பார்க்கும் யாவும்.
சன்னலிலே அவளின்
முகநிலவு ஒளி.
அண்ணலவன்
நெஞ்சினிலே தீபாவளி.
வாசலிலே கோலமிடும் குமரிக்கு
நேசக்கரம் நீட்டிடுவான்
கோலத்திற்கு சான்றளித்து.
கிணற்றடிக்கு நீர் பிடிக்க
கண்சாடை காட்டி வர
காற்றோட்டமாய் ஓடிக்
கரையில் நின்றிடுவான்
நீரூற்றாய்.
ஒரு வார்த்தைப் பேசிடவே
ஒத்து வராத நாக்கு
சித்தப்பிரமையில்
சிரித்தே நின்றிடுவான்.
இப் பருவத்தை கடப்பதற்கு
வேண்டுமே
விழிப்புணர்வுக் கப்பல்
ஈன்றோர் காட்டும்
வழியில் பயணிப்போம்.
வாலிபப் பருவம்
வனப்புமிக்க பருவம்
பூத்து மலருங்கள்
புன்னகை மலர்களுடனே.
காத்துக் கொள்ளுங்கள்
வாலிபப் பருவத் தேரேறி
ஐம்புலன் ஆளும் அரண்மனைக்குள்
இன்பமாய் நுழையும் இளவரசுகள்.
அரும்பு மீசையுடனே
அரும்பும் எண்ணங்கள்.
புவியீர்ப்பு விசையைத் தாண்டும்
இப்புலன் ஈர்ப்பு விசை.
பாலினக் கவர்ச்சிப் பார்வையில்
பளிச்சிடும்
பார்க்கும் யாவும்.
சன்னலிலே அவளின்
முகநிலவு ஒளி.
அண்ணலவன்
நெஞ்சினிலே தீபாவளி.
வாசலிலே கோலமிடும் குமரிக்கு
நேசக்கரம் நீட்டிடுவான்
கோலத்திற்கு சான்றளித்து.
கிணற்றடிக்கு நீர் பிடிக்க
கண்சாடை காட்டி வர
காற்றோட்டமாய் ஓடிக்
கரையில் நின்றிடுவான்
நீரூற்றாய்.
ஒரு வார்த்தைப் பேசிடவே
ஒத்து வராத நாக்கு
சித்தப்பிரமையில்
சிரித்தே நின்றிடுவான்.
இப் பருவத்தை கடப்பதற்கு
வேண்டுமே
விழிப்புணர்வுக் கப்பல்
ஈன்றோர் காட்டும்
வழியில் பயணிப்போம்.
வாலிபப் பருவம்
வனப்புமிக்க பருவம்
பூத்து மலருங்கள்
புன்னகை மலர்களுடனே.
காத்துக் கொள்ளுங்கள்
கனவுலக வாலிபத்தை....
0 Comments