பொய்க்கால் குதிரைகள்.
(வாலியின் நினைவுநாள் கவிதை)
அம்மா என்று அழைக்காத
உயிரில்லையே.
இப்பாட்டை முணுமுணுக்காத
மனித உயிர்கள்
இப்பூலகில் இல்லையே.
தொட்டால் பூ மலரும் பாடலால்
என் மனத் தொட்டிலில் அல்லவா
தினமும் பூ மலர்கிறது.
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
என நம் உள்ளுக்குள்
நம்பிக்கை
விதை விதைத்த
விவசாயி.
நல்ல பேரை
வாங்கச் சொன்ன
நல்லவரே!
என்ன விலை
அழகே என்று
அழகுக்கு
விலை வைத்த
அவதார புருஷன் நீ.
மௌன ராகத்தில்
உங்கள் பாடல்கள்
ரசிகர்களின் உள்ளங்களில்
புயலை அல்லவா
கிளப்பியது.
சித்தெறும்பு
என்னக் கடிக்குது
என்று எழுதியதற்கு
சில கட்டெறும்புகள்
உம்மைக் கடிந்து கொண்டன.
கேட்டதைக் கொடுப்பவனே
கவிஞன் என
பட்டதை
பகர்ந்தவன் நீ.
நாலு தலைமுறை
நாயகர்களுக்குப்
பாட்டெழுதிப்
பெயர் வாங்கிய
நக்கீரர் நீ.
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம்.
பாடலின் பெருமை
அனைத்தும்
உனக்கே தகும்.
குமரிப் பெண்ணின்
உள்ளத்தில் குடியிருக்க
வாடகை கேட்ட
வாலிபக் கவிஞர் நீ.
நீர் எழுதியவை
புத்தகங்களல்ல
பொக்கிஷங்கள்.
நீர் நடித்தும் இருக்கிறீர்
நாலு படங்களில்.
தாய் கொண்டு வந்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
என்று வாழ்வின் மாயத்தை
வடித்துக் காட்டினாய்.
கருவறை முதல்
கல்லறை வரை
உங்கள் கீதங்கள்
எங்களைத்
தாலாட்டிக் கொண்டிருக்கிறது.
சிரித்துவாழச் சொன்ன
சிரீரங்கத்து ரங்கராசனே!
சிரீரங்கத்து ரங்கராசனே!
பொய்க்கால் குதிரைகள்
நீர் எழுதிய புத்தகத்தின்
தலைப்பு பொய்யில்லை
இங்கு உரைப்பது
அனைத்தும்
மெய்க்கால் மனிதர்கள்.
நீர் எழுதிய புத்தகத்தின்
தலைப்பு பொய்யில்லை
இங்கு உரைப்பது
அனைத்தும்
மெய்க்கால் மனிதர்கள்.
அம்மா என்று அழைக்காத
உயிரில்லையே.
இப்பாட்டை முணுமுணுக்காத
மனித உயிர்கள்
இப்பூலகில் இல்லையே.
தொட்டால் பூ மலரும் பாடலால்
என் மனத் தொட்டிலில் அல்லவா
தினமும் பூ மலர்கிறது.
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
என நம் உள்ளுக்குள்
நம்பிக்கை
விதை விதைத்த
விவசாயி.
நல்ல பேரை
வாங்கச் சொன்ன
நல்லவரே!
என்ன விலை
அழகே என்று
அழகுக்கு
விலை வைத்த
அவதார புருஷன் நீ.
மௌன ராகத்தில்
உங்கள் பாடல்கள்
ரசிகர்களின் உள்ளங்களில்
புயலை அல்லவா
கிளப்பியது.
சித்தெறும்பு
என்னக் கடிக்குது
என்று எழுதியதற்கு
சில கட்டெறும்புகள்
உம்மைக் கடிந்து கொண்டன.
கேட்டதைக் கொடுப்பவனே
கவிஞன் என
பட்டதை
பகர்ந்தவன் நீ.
நாலு தலைமுறை
நாயகர்களுக்குப்
பாட்டெழுதிப்
பெயர் வாங்கிய
நக்கீரர் நீ.
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம்.
பாடலின் பெருமை
அனைத்தும்
உனக்கே தகும்.
குமரிப் பெண்ணின்
உள்ளத்தில் குடியிருக்க
வாடகை கேட்ட
வாலிபக் கவிஞர் நீ.
நீர் எழுதியவை
புத்தகங்களல்ல
பொக்கிஷங்கள்.
நீர் நடித்தும் இருக்கிறீர்
நாலு படங்களில்.
தாய் கொண்டு வந்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
என்று வாழ்வின் மாயத்தை
வடித்துக் காட்டினாய்.
கருவறை முதல்
கல்லறை வரை
உங்கள் கீதங்கள்
எங்களைத்
தாலாட்டிக் கொண்டிருக்கிறது.
0 Comments