மீன்போல் மிதக்கும்
மந்திரக் கலை!
உடலுக்கும் உள்ளத்திற்குமுகந்த
உடற்பயிற்சிக் கலை!
கடலிலும் கலக்கலாம்
கற்றிடின் இக்கலை!
திடப்பொருள் மூழ்குவது
திரவத்தில் இயல்பே!
கிடந்து மிதப்பது
நீச்சலின் பெருமையே!
நீச்சலில் நீள்வது
ஆரோக்கியமும் ஆயுளும்!
இதயத்தின் இயக்கம் சீராகுமே!
நுரையீரலின் இயக்கம் நூறாகுமே!
1 Comments
ஆழ்ந்த அறிவை
ReplyDelete.......... அறியப் பழகு
தாழ்ச்சி உணர்வைத்
........ தவிர்க்கப் பழகு
காழ்ப்பு ணர்ச்சிக்
............களையப் பழகு
வாழ்வில் நீந்த
............வகையாய்ப் பழகு.!