
டொரண்டோ,
கனடாவின் டொரண்டோ நகரில் லாரன்ஸ் ஹைட்ஸ் பகுதியில் ஜக்காரி கோர்ட்டு மற்றும் பிளெமிங்டன் சாலையருகே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், ஒருவர் பலியானார். ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் என 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், துப்பாக்கி குண்டு காயங்களால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
இதில் பல்வேறு நபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அவர்களை பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என போலீசார் தெரிவித்தனர். அவர்கள் வாகனங்களில் தப்பினரா? அல்லது நடந்து சென்றனரா? என்றோ அல்லது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்றோ போலீசார் தெரிவிக்கவில்லை. ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இந்த சம்பவத்திற்கு டொரண்டோ மேயர் ஒலிவியா சோவ் வருத்தம் தெரிவித்து உள்ளார். எனினும், சம்பவ பகுதியில் இருந்து பல வாகனங்கள் விரைவாக சென்றன என அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கூறியுள்ளார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/VJrtUOk
via IFTTT
0 Comments